புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 1 அக்டோபர் 2022 (14:13 IST)

டிக்கெட் கேட்ட மூதாட்டி சாட்சியாக சேர்ப்பு என திமுக நிர்வாகி தகவல் !

old women
கண்டக்டரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் சாட்சியாக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகி டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார்

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில், மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.

 
இந்த நிலையில் தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து ,  திமுக நிர்வாகி ரஜீவ்காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்,’’கோயம்புத்தூரில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று பிரச்சனை செய்யச் சொல்லி மூதாட்டியை தூண்டி திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு!

மூதாட்டி சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்!!’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj