1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:36 IST)

தனித்தமிழ் இயக்கம் என்ன ஆச்சு! வெட்கமா இல்லையா- சீமானுக்கு ராஜிவ் காந்தி கேள்வி

தமிழ் நாட்டில் நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமஸ்கிருத மந்திரம் ஓத வழிபாடு செய்துள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டிற்கும் மேலாக   நாம் தமிழர் என்ற கட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.  இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், மேடைகளில் தமிழ் என்று முழங்கி வரும்  நிலையில், இன்று, தன் மகன் திருச்செந்தூர் முருகன் கோவியில் தன் மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, துலாபாரம் கொடுத்து,  சமஸ்கிருத மந்திரம் ஓத வழிபாடு செய்தார்.
seeman

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து  2021 ஆம் ஆண்டு விலகிய ராஜீவ் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், r..@SeemanOfficial உங்கள் வீரம்,உங்கள் தனித்தமிழ் இயக்கம் என்ன ஆச்சு!

வெட்கமா இல்லையா…ஊர் முழுக்க பொய் சொல்லி தம்பிகளை ஏமாத்த…
அந்த திருச்செந்தூர் கோயிலில் தான் கலைஞர் கொண்டு வந்த தமிழ் வழிபாட்டு முறை இருக்கே ஏன் பன்னல?

ஓ… ஊருக்கு தான் உபதேசம்… புரட்சியெல்லாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.