பேருந்தில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு: நெட்டிசன்கள் கண்டனம்!
பேருந்தில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு: நெட்டிசன்கள் கண்டனம்!
கண்டக்டரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார்
இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்
இந்த நிலையில் தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஓசி என்று அமைச்சர் சொன்னால் அது விளையாட்டு, ஓசியில் போகமாட்டேன் என்று சொன்னால் மட்டும் வழக்கா? என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran