திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:43 IST)

பெற்ற மகளை வெட்டிக் கொன்ற கொடூர தந்தை

தாய், தந்தையிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்கச் சென்ற 10 வயது சிறுமியை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மகள் இருளாயி (10) உட்பட 3 குழந்தைகள் உள்ளது. முருகன் அவரது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவருடன் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம். 
 
இந்நிலையில் நேற்று இரவு முருகன், லட்சுமிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து லட்சுமியைத் தாக்கியிருக்கிறார். இதைப்பார்த்த  மகள் இருளாயி தாயைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாள். அப்போது கோடாரி இருளாயி மீது பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்,  இருளாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முருகனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.