1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (14:53 IST)

பேருந்துக் கட்டண உயர்வை ரத்துசெய்து உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

பேருந்துக் கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை  உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. 
 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேருந்துக் கட்டண உயர்வால் அரசு பேருந்தை நம்பியிருக்கும் பல பொதுகக்கள் பாதிப்படைந்துள்ளனர், எனவே இதனை கருத்தில் கொண்டு விலை உயர்வை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று  முறையிட்டார். அவரது கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படும் என்று அறிவுறுத்தினர். அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கின் முக்கியத்துவம் கருதி நாளை அல்லது நாளை மறுநாள் மனுவின் மீதான  விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.