திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (14:48 IST)

பெற்ற குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தம்பதியினர் கைது.

அரியலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை அவரது பெற்றோர் பணத்திற்காக விற்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் அருகே பணத்திற்காக பெற்ற குழந்தையை விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். மறைவிலிருந்து நோட்டமிட்ட போலீஸார்  பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையை 50000 ரூபாய்க்கு விற்க முயன்ற  நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த தம்பதியினரை கையும் களவுமாக பிடித்தனர். போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.