வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சென்னை , வியாழன், 2 மே 2024 (15:36 IST)

வீட்டு உரிமையாளரை படியில் தள்ளி கொலை செய்த கள்ளக்காதலன்..!

சென்னை கோயம்பேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்துரை பாண்டியன்(52), இவரது மனைவி பொன்மாலா(47), இவர்களுக்கு கோபாலகிருஷ்ணன்
(15), என்ற மகனும் யோக தர்ஷினி(13), என்ற மகளும் உள்ளனர். 
 
இவரது வீட்டின் தரை தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன் தினம் முதல் தளத்தில் உள்ள படியில் இருந்து கீழே விழுந்து கிடந்த மைக்கேல் துரைபாண்டியனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மைக்கேல் துறை பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரியவந்த நிலையில் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
 
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த வெங்கடேசன்(36), என்பவர் மைக்கேல் துரை பாண்டியனை தள்ளிவிட்டு ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது அப்போதுதான் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து தலைமறைவாக இருந்த அந்த வெங்கடேசனை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் வெங்கடேசனுக்கும்,பொன்மாலாவிற்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனை மைக்கேல் துரை பாண்டியன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனுக்கும், மைக்கேல் துரை பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மைக்கேல் துரை பாண்டியனை பிடித்து கீழே தள்ளி விட்டு வெங்கடேசன் தப்பி சென்றதும் இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மைக்கேல் துரை பாண்டியன் இறந்து போனதும் தெரியவந்தது.
 
இதையடுத்து தலைமுறைவாக இருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.