தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து
கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆளுநரின் உத்தரவின் பேரில் கல்லூரி முதல்வர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் கடந்த 14 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், பாஜக தேர்தல் பிரசாரத்திற்கு உதவுவதற்காக மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்தச் சுற்றறிக்கைக்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில், மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிப்பதற்கான சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.