1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (14:56 IST)

சண்டிகர் மேயர் தேர்தல்..! இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.!!

chandigar election
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடை கால தடைவிதிக்க பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு  நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
 
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.  35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி தொடர்பாக பாஜக வெற்றிக்கு எதிராக  இடை கால தடைவிதிக்க கோரி பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
ஆம்ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் தொடர்ந்த வழக்கில்  புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தற்போதைய தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.  

 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த  பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம், மேயர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் தேர்தல் பொறுப்பாளர்கள் 30ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது