1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:45 IST)

அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு..சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

periya karuppan
அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுக அதிமுகவினரி டையே நடந்த  மோதல் ஏற்பட்டது. 
 
இந்த சம்பவத்தின் அடிப்படையில் பெரியகருப்பன் உட்பட 8 திமுகவினர் பேர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர்  ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் பெரிய கருப்பன் இல்லை.. அந்த சம்பவத்துக்கு தொடர்பு இல்லை என கூறினார்.
 
இதனையடுத்து சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குக்கு 4 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 
Edited by Mahendran