வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (22:24 IST)

தாய்ப்பசுவை வெட்டியதால் கதறி அழுத கன்று

cow
புதுச்சேரி மாநிலத்தில் கன்றுக் குட்டி முன்பு தாய்ப்பசுவை வெட்டியதால் கன்று கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மா நிலத்தில் உள்ள வினோபாவா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டுகின்ற ஒரு பகுதி உள்ளது.

இங்கு அரசு அனுமதியின்றி மாடுகள் ஞாயிற்றூக் கிழமையில் வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த  நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு,  ஒரு கன்று அந்த வழியில் கத்திக் கொண்டு வந்துள்ளது.

அப்போது,  வாயில்லா ஜீவன் கள் அமைப்புத் தலைவர் அசோக்ராஜ் இதுகுறித்து விசாரித்தார். அப்போது, இரு நாட்களுக்கு முன்பு இந்தக் கன்றின் தாய்ப்பசு வெட்டப்பட்டதாகவும், அதனால், இந்தக் கன்று இங்கு வந்து அடிக்கடி அழுவதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Edited By Sinoj