1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (19:12 IST)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை விடுமுறை!

school
மாண்டஸ்’ புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட ஒருசில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனால் நாளை  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva