ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (11:00 IST)

கரன்சி நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி! – மதுரையில் ஈரான் நாட்டுக்காரர் கைது!

Iran man arrest
வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடி சென்ற ஈரான் நாட்டை சேர்ந்தவரை கைது செய்த தனிப்படை போலிஸார்


 
மதுரை மாநகர் நேதாஜிரோடு பகுதியில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணம் திருடி சென்றதாக கடந்த 26 ஆம் தேதி மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்

இதனை தொடர்ந்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் இது சம்பந்தமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பணமாற்றுதல் நிறுவனங்களான Forex நிறுவனங்களிலும் குற்றவாளி குறித்த தகவல் அளிக்கப்பட்டது  அதன்படி  ARJUNA FOREX என்ற நிறுவனத்தார் அளித்த தகவலின் பெயரில் சவுத்டெல்லி கிருஷ்ணா மார்கெட் பகுதியை சேர்ந்த முகமது அலி ( 47) என்ற நபரை பிடித்து கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலைய காவல்துறையினர் அழைத்துசென்றனர்.

 
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது அலி ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்ததாகவும் பின்னர் தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை எனவும் சட்ட விரோதமாக இந்தியா முழுவதிலும் சுற்றித்திரிந்து இது போன்ற பண திருட்டு மோசடிகள் செய்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் முகமது அலியின் பாஸ்போர்ட் மும்பையிலுள்ள ஈரான் தூதரகத்தில் வாங்கி வைத்துள்தாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில்  ஈரான் நாட்டு தொடர்பான ஆவணங்கள் எதுவும்  இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் மீது மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்காத் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து முகமது அலியை  மதுரை திடீர்நகர் காவல்நிலைய குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு அழைத்துவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முகமது அலி தனது பெயரில் ஆதார் கார்டு மற்றும் பான்கார்டு ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் அதனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

ஈரானில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி ஆதார் பான்கார்டுடன் தங்கி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது