மிகப்பெரிய ஆட்கள் பாஜகவிற்கு வருகிறார்கள்.. பொறுத்திருந்து பாருங்கள்.! அண்ணாமலை..!!
மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தி காரணமாக சிலர் கட்சியை விட்டு, மற்றொரு கட்சிக்கு தாவும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அண்மையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, மக்களவைத் தேர்தலில் சீட்டு வழங்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதேபோல் பல முக்கிய புள்ளிகள் பதவிக்காக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய புள்ளிகள் வரும்போது கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்களை இணைக்க வேண்டி உள்ளது என்றும் ஏற்கனவே கட்சிகள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டி உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.
பாஜக கூட்டணியே வேண்டாம் என்ற அதிமுக தான் நாள்தோறும் பாஜக பாஜக என புலம்பி வருகிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.