1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (09:07 IST)

இன்று நடைபெறும் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது: ஓபிஎஸ் அறிவிப்பு

ops
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார். இந்த நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியபோது ’ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்றும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்றும் அறிவித்துள்ளார்