1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (09:18 IST)

திமுக பனங்காட்டு நரி.. பாமகவின் சலசலப்புக்கு அஞ்சாது! – தயாநிதி மாறன்!

பாமக கூட்டணிக்கு பணம் வாங்கும் கட்சியென்றும், அவர்களது அச்சுறுத்தல்களுக்கு திமுக அஞ்சாது என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாநிதி மாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் “பாமக எப்போதும் வன்முறையை நம்பியிருக்கும் கட்சி. ஆனால் திமுக பனங்காட்டு ந்ரி. அதனால் பாமகவின் சலசலப்புக்கு திமுக அஞ்சாது. கூட்டணிக்காக பாமக பணம் வாங்குவது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் அதை அன்புமணியும், ராமதாஸும் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.