தஞ்சை பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி: தமிழ் குடமுழுக்கு போராட்டம்!
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழில் வேள்வி நடத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் கோவிலுக்கு தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் சில குரல் எழுப்பியுள்ளன. இதற்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலைய துறை ஆண்டாண்டுகாலமாக பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரிய கோவில் அருகே தமிழில் வேள்வி யாகம் நடத்தும் போராட்டத்தை தமிழ் அமைப்புகள் சில மேற்கொண்டுள்ளன.