வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (11:43 IST)

ஒன்று போதாது 8 இடங்களில் 8 வழிச்சாலை வரணும் - டாக்டர் கிருஷ்ணசாமி

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை இல்லாமல் 8 இடங்களில் எட்டு வழிச்சாலை அமைய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இத்திட்டத்திற்காக விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 8 வழிச்சாலை அமைப்பதினால் விவசாயம் பாதிக்கப்படாது என தெரிவித்தார். மேலும் சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை இல்லாமல் இன்னும் 8 இடங்களில் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும். ஏனென்றால் தமிழகம் தொழில் வளர்ச்சி அடைய 8 வழிச்சாலை உபயோகமாக இருக்கும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.