1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:16 IST)

வலிமை என்ற பெயரில் சிமெண்ட்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
இன்று சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்பட இருப்பதாகவும் அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் வலிமை என்ற புதிய வணிக பெயர்கொண்ட சிமெண்சட் இது இருக்கும் என்றும் இந்த ஆண்டே வெளிச்சந்தையில் இதனை அறிமுகப்படுத்த டான்செம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
 
இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்துவரும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வலிமை என்ற நிலையில் அதே பெயரில் தமிழக அரசு சிமெண்ட் அறிமுகப்படுத்தவுள்ளது ரசிகர்களுக்கு குஷியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது