செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (13:21 IST)

திமுகவுடன் கூட்டணி: அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ்: தங்க தமிழ்செல்வன் பொளேர்!

ஓ.பன்னீர் செல்வம்தான் திமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர் என தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளார். 
 
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்தது கட்சியே இல்லை. அமமுக வெறும் அணி. அதிமுகவை விட்டுச் சென்ற சனி. அதிமுகவில் இருந்து வளர்ந்து கொழுத்தவர்கள் இன்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என கூறுவது எவ்வளவு பெரிய ராஜ துரோகம் என அமமுகவையும், அக்கட்சியினரையும் விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன், 22 தொகுதியிலும் அமமுகதான் வெற்றிபெறும். டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைவதற்காக இந்த ஆட்சியை கலைக்கிறோம். 
 
திமுகவோடு நாங்கள் எதற்குக் கூட்டணி வைக்க வேண்டும். ஜெ ஆட்சியை கலைக்க பேரவையில் திமுகவோடு ஆதரவு அளித்து கூட்டணி வைத்த ஓபிஎஸ் அழியபோவது உறுதி. ஓபிஎஸ் - ஈபிஎஸ்சுக்குமான மோதல் இருந்து வருகிறது. தோல்வி அடைந்ததும் அதிமுக அமைச்சர்கள் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சித்துள்ளார்.