1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (22:23 IST)

தமிழுக்கு முக்கியத்துவம் தந்த தனலெட்சுமி வங்கி

dhanalakshmi
தமிழுக்கு முக்கியத்துவம் தந்த தனலெட்சுமி வங்கிக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு குவிந்து வருகிறது.
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில்  உள்ள ரசீதுகளில் ஆங்கிலம் தான் அதிகம் அச்சிடப்பட்டிருக்கும். இதனால், அங்கு வரும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாறாக தனலட்சுமி வங்கி தமிழில் ரசீது அச்சடித்து வழங்கி வருவது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாநகராட்சியில் உள்ள கோவை சாலையில் செயல்பட்டு வரும் தனலெட்சுமி வங்கி கரூர் கிளையில் பணம் கட்ட வேண்டிய சலான் எனப்படும் பணம் கட்டும் வங்கி ரசீது முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ் ஆங்காங்கே மறைக்கப்படும் நிலையில் தனலெட்சுமி வங்கி என்கின்ற தனியார் வங்கி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Edited by Sinoj