திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (13:27 IST)

கனிமொழிக்கு எதிரான சித்து விளையாட்டில் ஸ்டாலின்: தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் இந்த யோசனையை அதிமுக நிராகரித்துவிட்டது

இந்த நிலையில் எம்பிக்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய ஸ்டாலின் கூறியது ஒரு அரசியல் சித்து விளையாட்டு என்றும், மாநிலங்களவையில் இருந்து கனிமொழியை வெளியேற்ற அவர் போடும் தந்திரமே இந்த ராஜினாமா ஆலோசனை என்றும் அதிமுக எம்பியும் துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

மேலும் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எம்பிக்கள் ஆதரிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கூறுவது தமிழகத்துக்கு துரோகம் இழைத்து, ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமையும் என்றும் தம்பிதுரை மேலும் கூறினார். ஆந்திராவில் செம்மரம் வெட்டவந்தவர்கள் என்று கூறி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களை சுட்டுக் கொல்வது உட்பட தமிழகத்தை தொடர்ந்து வஞசிக்கும் ஆந்திர அரசுக்கு ஸ்டாலின் ஆதரவு அளிக்கச் சொல்கிறாரா? என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.