1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (10:24 IST)

டூப்ளிகேட் மோடி பாஜகவில் இருந்து விலகல்: காங்கிரஸுக்கு பிரச்சாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அபிநந்தன் பதக். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இவர் டூப்ளிகேட் மோடி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். 
 
அதாவது அபிநந்தன் பதக், பிரதமர் மோடியை போன்று தோற்றத்திலும், குரலிலும், நடை, உடை அனைத்திலும் அவரின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறார். இதனாலேயே இவரை டூப்ளிகேட் மோடி என அழைக்கின்றனர். 
 
இந்நிலையில் இவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளார். இது குறித்து அபிநந்தன் பதக் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, பாஜக ஆட்சியில் நல்ல காலம் வராது, எனவே காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் 4 நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அபிநந்தன் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
மோடியை போன்ற தோற்றத்தில் இருக்கும் அபிநந்தன் பாஜகவையும், மோடியையும் விமர்சிப்பதை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கின்றனர். அதோடு அவருடன் பலர் செல்பி எடுத்து செல்கின்றனர்.