திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (09:31 IST)

டேக் ஆஃப் ஆன விமானத்தில் திடீர் கோளாறு..! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Flight
சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்திலேயே நிறுத்தப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாள்தோறு பல விமானங்கள் பல நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்துக்கு தாய் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டது.

ஓடுதளத்தில் புறப்பட்டபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக திறமையாக செயல்பட்ட பைலட் ஓடுதளத்திலேயே விமானத்தை கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் விமானம் வாகன உதவியுடன் தளத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது. விமானியின் சமயோஜிதமான செயலால் 164 பேர் உயிர் தப்பியுள்ளனர்.