திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:09 IST)

டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: வழக்கு தொடரப்படுகிறதா?

teachers
டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போட்டித் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டெட் பட்டதாரிகள்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அறிவித்தபடி பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியான நிலையில் போட்டித் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran