1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tender for madurai kalaignar library

மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

மதுரை
மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!
மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என ஏற்கனவே திமுக அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்கு சற்றுமுன் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உலகத்திற்காக இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சார்பாக ரூபாய் 90 6.5 கோடி மதிப்பிற்கு வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஒப்பந்த நூலகத்திற்கு விண்ணப்பங்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 16 வரை வினியோகம் செய்யப்படும் என்றும் கட்டுமான பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த ஆண்டுக்குள் மதுரையில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது?