1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (16:19 IST)

’’கிளைமாக்ஸில் வருவார் விஜயகாந்த்...234 தொகுதிகளிலும் போட்டி ‘’ - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என  அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்தவருடம் ஏப்ரம் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜெயிக்க வேண்டி ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் எதிர்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனையுமான பிரேமலதா விஜயகாந்த் அடுத்த வருடம் வரவுள்ள  சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளும் தேமுதிக போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்தித்த அக்கட்சி அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்பது கேள்வியாக இருந்தாலும்,  சமீபத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தலைமையில் 3 வது அணி அமையும் என்றும் தேமுதி தலைவர் விஜயகாந்த் 2021 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத்தின் கிளைமாக்ஸில் வருவார் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.