1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (19:13 IST)

கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் பணி தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் கோவில் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் 3 கோவில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்ற தங்கங்களை 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் 
 
திருவேற்காடு சமயபுரம் இருக்கன்குடி ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற நகைகளை 24 காரட் நகைகளாக மாற்றும் பூர்வாங்க பணிகள் இதனை அடுத்து தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
திருக்கோயில்களில் இறைவன் இறைவி ஆகிய சிலைகளுக்கு கவசங்கள் மற்றும் கிரீடங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகள் திரும்ப பெறப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.