திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (18:42 IST)

பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்!

பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்!

கொல்கத்தாவில் இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
இளம்பெண் ஒருவர் தனது புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் தனது 14 வயது சகோதரனை டேக் செய்திருந்தார். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த அக்னிஸ்வர் சக்ரவர்த்தி என்ற முன்பின் தெரியாத நபர் அந்த புகைப்படத்துக்கு ஸ்மைலியை கம்மெண்ட் செய்தார்.
 
இதனையடுத்து அந்த நபர் யார் என்று தெரியாததால் அந்த இளம்பெண் அந்த ஸ்மைலி கம்மெண்ட்டை அதிலிருந்து நீக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், அந்த பெண்ணையும், அவரது சகோதரனையும் தனது நண்பர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து பலாத்கார மிரட்டல் விடுத்த இளைஞன் அக்னிஸ்வர் மீது பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அந்த இளம்பெண்ணின் சகோதரன் 14 வயது சிறுவனையும் பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டியதால் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.