1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2016 (14:36 IST)

தமிழகத்துக்கு மீண்டும் பின்னடைவு: நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் ஷாக்!

தமிழகத்துக்கு மீண்டும் பின்னடைவு: நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் ஷாக்!

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், காவிரி பாசன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழு இன்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


 
 
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தமிழகத்துக்கு மிகவும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
 
* அடுத்த ஆண்டு மே மாதம்வரை, கர்நாடகாவிற்கு, 65.48 டிஎம்சி தண்ணீர் தேவை. தமிழகம், புதுச்சேரிக்கு 143.18 டிஎம்சி தண்ணீர் தேவை.
 
* கர்நாடக காவிரி நீர்பிடிப்பு அணைகளில் தற்போது 22.90 டிஎம்சி தண்ணீர் உள்ளது. மேட்டூர் அணையில் 31 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
 
* தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலுமே, நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் போய்விட்டது.
 
* இரு மாநில விவசாயிகளுமே, மழையில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள், சம்பாவுக்கு நாற்றுவிட முடியவில்லை என கூறுகிறார்கள். கர்நாடகாவிலும் பயிர்கள் காய்ந்துள்ளன.
 
* தமிழகத்தில் கால்நடைகளுக்கு நீர் இல்லை, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.
 
* வட கிழக்குப் பருவ மழையை சேமிக்க தமிழக கடலோர மாவட்டங்களில் ஏரி, குளம் அமைக்க வேண்டும்.
 
இவைகள் தான் தமிழகத்துக்கு எதிராக உள்ள வலுவான தகவலாக அந்த அறிக்கையில் உள்ளவை. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 143 டிஎம்சி தண்ணீர் தேவை என கூறியுள்ள நிபுனர் குழு கர்நாடகத்தில் 22 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது என கர்நாடகத்துக்கு சாதகமாக கூறியுள்ளது.
 
தமிழகத்தின் நீர் தேவைக்கு பருவமழையை சேகரித்து வைக்க ஏரி, குளம் அமைக்க அறிவுரை கூறியுள்ளது. கர்நாடகத்தில் பருவமழை முடிந்து விட்டது. ஆனால் தமிழகத்திற்கு இனிமேல் தான் பருவமழை வர உள்ள நிலையில் இதுவும் தமிழகத்துக்கு எதிரான பாய்ண்டாகவே உள்ளது. இதுவே கர்நாடக அரசு நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வலுவான பாய்ண்டாக அமையும்.