1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (18:41 IST)

பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழக பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற இருப்பதாலும், இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாலும் கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது 
 
இந்த கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாட்டில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது