திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (12:26 IST)

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் !

திருச்சி மாவட்டம் துறையூரில்  தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்  மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு  மாணவன் கடந்த 5ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பியதும்  விளையாட செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் .  இரவு அவர் வ் வீட்டிற்குத் திரும்பாததால், பெற்றோர்     மாணவனின் நண்பர்கள் வீட்டிலுல் சில இடங்களிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

எனவே   பெற்றோர் மாணவனைக் காணவில்லை எனப் புகார் கொடுத்தனர்.  இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். இதில், மாணவன் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டும் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது.  இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.