1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:15 IST)

ஏப்ரல் 2ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு!

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் அதேபோல் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது 
 
மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழகத்தில் உள்ள மொத்தம் 9 ஆயிரத்து 484 பணியிடங்களையும் நிரப்புவதற்காக முழு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து ஆசிரியர் தேர்வு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்