செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (08:47 IST)

10ஆம் வகுப்பு மாணவனுடன் காதல்: அரியலூர் ஆசிரியை போக்சோவில் கைது!

பத்தாம் வகுப்பு மாணவனுடன் காதலில் ஈடுபட்ட அரியலூர் ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர்கள் சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அரியலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் காதலில் இருந்தததாக கூறப்படுகிறது 
 
இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 15 வயது பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டபோது அரியலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது