வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (21:23 IST)

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது ...

கன்னியாகுமரி   மாவட்டம்  கொல்லங்கோடு அருகேயுள்ள கல்பாறைபொற்றையில் என்ற பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில்   டேவிட் ராஜ்,(46 ) என்ற ஆசிரியாராக  6-ம் வகுப்புக்கு பாடம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் அந்த வகுப்பில் படிக்கும் 3 = மாணவிகளிடம் ஆசிரியர் டேவிட்ராஜ், தவறாக  நடப்பதாக மாணவிகள் புகார் கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் ஆசிரியர் டேவிட்ராஜ், 3 மாணவிகளிடம் தவறாக நடந்ததுடன் சில்மி‌ஷம் செய்ததாகத் தெரிகிறது.
 
இதனை அந்த 3 மாணவிகளும் தங்கள் பெற்றோரிடம் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். பின்னர்  பள்ளியின் தலைமை ஆசிரியர் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் ஆசிரியர் டேவிட்ராஜிடமும்  , மாணவிகளுடமும் தனித்தனியாக  விசாரணை மேற்கொண்டனர் . அதில் ஆசிரியர் டேவிட்ராஜ், மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.
 
அதன்பின்னர் குழந்தைகள் நல அதிகாரிகள்  கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தனர் அங்கிருந்த போலீசார் டேவிட்ராஜை விசாரணைக்கு அழைத்துச் சென்று,அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.