1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (13:03 IST)

பால்விலை உயர்வால், , தமிழகத்தில் டீ, காபி விலை உயர வாய்ப்பு?

Tea
தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ளதை அடுத்து டீக்கடைகளில் டீ காபி விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பால் பொருட்களுக்கு  5% ஜிஎஸ்டி வரி விதித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் வரை பால் விலையை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
அதேபோல் தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் விலை இன்று முதல் உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பால் விலையை அதிகரித்ததை அடுத்து டீக்கடைகளில் டீ காபி விலையும் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக பெரிய ஓட்டல்களில் மிக அதிக அளவு டீ காபி விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
ஏழை எளிய மக்களின் ஒரே உற்சாக பானமாக இருக்கும் டீ காபி விலை உயரும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது