1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:05 IST)

தமிழகத்தில் இன்று முதல் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு; அதிர்ச்சி தகவல்

milk
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் மத்திய அரசு பால் தயிர் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு விதிக்கப்பட்டதை அடுத்து ஆவின் பாலின் விலை 2 ரூபாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அரசு ஜிஎஸ்டி 5% உயர்த்தியது என்றால் அதைவிட அதிகமாக மாநில அரசு உயர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது 
 
இந்த நிலையில் ஆவின்பால் உயர்வை அடுத்து தற்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பால் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மற்ற நிறுவனங்கள் நான்கு ரூபாய் வரை பால் விலையை உறுத்தினாலும் சீனிவாசா நிறுவனம் மட்டும் பங்கு விலையை லிட்டருக்கு ரூபாய் 2 ரூபாய் மட்டுமே உள்ளதாக அறிவித்துள்ளது