வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (15:53 IST)

தங்கத்தின் மீதான வரி குறைப்பு எதிரொலி.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்து, ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
 
சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,000ஐ கடந்து விற்பனையானது. இதற்கு பல்வேறு கரணங்கள் இருந்து வந்தாலும் அரசின் சுங்க வரியும் முக்கிய காரணமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது. 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.


சுங்கவரி குறைப்பு காரணமாக கிராமுக்கு ரூ.260 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2080 குறைந்து ரூ.52,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.