வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (15:13 IST)

நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்.! ராகுல் காந்தி விமர்சனம்.!!

Modi Rahul
மத்திய பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என்றும் கூட்டாளிகளை சமாதானப்படுத்தும் பட்ஜெட் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கிடப்பில் உள்ள திட்டங்களுக்கும் நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள, மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என்றும் கூட்டாளிகளை சமாதானப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 
சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட் என்று அவர் விமர்சித்துள்ளார். காங்கிரசின் முந்தைய பட்ஜெட் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.