வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (19:26 IST)

இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் லீவ் – ’குடிமகன்கள்’ வருத்தம் !

தமிழகத்தில் மே 19 அன்று 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து இன்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

தமிழகத்தில் நாளை மறுதினம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அதை முன்னிட்டு இன்று மாலை முதல்  மே 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தேர்தலை அமைதியாக நடத்தவும் தேவையில்லாத வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான மே 23 அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.