1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (13:57 IST)

தீபாவளி மதுவிற்பனை: 2 நாட்களில் எத்தனை கோடிக்கு தெரியுமா?

tasmac
ஒவ்வொரு பண்டிகை தினத்தின் போதும் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் மது விற்பனையை ரூ.464.21 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
தீபாவளிக்கு முந்தைய நாட்கள் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து ரூ.464.21  கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
அதிகபட்சமாக மதுரையில் 101.04 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகவும் சென்னை ரூ.90.16 கோடிக்கும், திருச்சியில் ரு.92.02 கோடிக்கும், சேலத்தில் 93.18 கோடிக்கும் கோவையில் 87.81  கோடிக்கும் வெளியாகியுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran