ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறிய ரஜினி, கமல்
தமிழகத்தில் மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடடி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில்,
எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து.என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இன்று காலையில் தன் இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கையசைத்த் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj