செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (20:44 IST)

தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை தமிழக அரசு மூடவேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக 6வது முறையாக மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றவுடன் மதுவிலக்கை கொண்டுவரும் நடவடிக்கையாக டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.
 
அதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்கிறது.
 
மேலும், தமிழகம் முழுவதும் பொது மக்கள் குறிப்பிட்ட, மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வர வேண்டும்.
 
இதன் மூலம் விரைவில் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகத்தை முதல்வர் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.