1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac sales ban tomorrow at thoothukudi district

நாளை மது விற்பனைக்கு தடை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு

tasmac
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது. அதேபோல் தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளதை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்
 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் நாளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் 
 
தடை உத்தரவை மீறி மதுபானம் விற்பவர்கள் மதுபானத்தை  பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் ஆகியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பதியில் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு!