அரசு உள் நோக்கத்தோடு எங்களது போராட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளது! - தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தலைவர் பாலுசாமி
மதுரையில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர் பாலுச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்......
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் 12.10.24ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு நிலையில் காவல் துறை தக் நடத்த விடாமல் தடுத்தது இது கண்டிக்க தக்கது.
தமிழ்க அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சொற்ப ஊதியத்தில் 21ஆண்டுகளாக பணி புரியும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியை பணியாளர்கள் மீது திணிப்பதை மறு பரிசீலனை செய்து அதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்
ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடை, ஓய்வூதியம் குடும்ப ஓயவூ தியம் வழங்கிட வேண்டும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் ஊழல்களை நிர்வாக சீர்கேடுகளை குறைத்திட வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தோம். அதை தடுத்ததால் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை
நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாத பட்சத்தில் நாங்கள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றார்.