1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (13:16 IST)

டெல்லி போராட்டம் எதிரொலி: தஞ்சை விவசாயிகள் தள்ளுமுள்ளு!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..! 
 
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அவர்களுக்கு ஆதரவாக தற்போது தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவிவருகிறது.