1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (16:26 IST)

காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட்: தஞ்சை டிஐஜி அதிரடி உத்தரவு

காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் சஸ்பெண்ட்: தஞ்சை டிஐஜி அதிரடி உத்தரவு
குற்றவாளியை கைது செய்யாமல், வழக்குபதிவு செய்யாமல் விடுவித்த காவல்துறையில் பணிபுரியும் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் மூலமாக தங்கள் உடல் முழுவதும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டி அருகே வந்து கொண்டிருந்த போது காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்
 
இதனையடுத்து அந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கு போடாமல் அவர்களை விடுவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தஞ்சை சரக டிஐஜி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் 
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது