சுவாதியின் அப்பாவா? சித்தப்பாவா? : தமிழச்சி வீசும் அடுத்த குண்டு

சுவாதி கொலை : தமிழச்சி வீசும் அடுத்த குண்டு


Murugan| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (14:20 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு பற்றி தமிழச்சி என்பவர் பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 

 

 
இந்த வழக்கில், தொடக்கத்திலிருந்தே காவல்துறை உண்மையை மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வரும் இவர் தற்போது சில புதிய தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
சுவாதி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் ஜுன் 25இல், ரயில்வே காவல்துறை டி.ஜ.ஜி.பாஸ்கர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், 'சுவாதி இரண்டு வருடங்களாக ஒருவரை காதலித்துக் கொண்டிருப்பது சுவாதியின் பெற்றோருக்கு தெரியும்' என்கிறார்.
 
ஜுன் 25இல், சுவாதியின் சகோதரி நித்யா 'சுவாதிக்கு காதலர் யாரும் இல்லை' என்று மறுப்பு அறிக்கை வெளியிடுகிறார். அதன் பின் இன்னும் சில தினங்களில் ரயில்வே காவல்துறை விசாரணையில் தடுமாறுகிறது என்று தமிழக காவல்துறைக்கு சுவாதியின் படுகொலை விசாரணை மாற்றப்படுகிறது.
 
சென்னை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட அவ்விசாரணை குழு 'ஒருதலை காதல்' என்கிறது. கமிஷனர் குழுவில் இருந்த போலீஸ் அதிகாரி  இன்னும் பல காரணங்களை அடுக்குகிறார்.
 
சுவாதியைக் குறித்து X என்ற பெண்ணிடம் (வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்) விசாரணை நடத்தியதும் இதே அதிகாரிதான்.
 
பல தகவல்களை வெளியிட்ட அப்பெண் 'சுவாதியின் அப்பாவும் அவரது சித்தாப்பாவும் தான் அப்படுகொலைக்கு காரணமாக இருக்க முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தகவல்களை பெற்றுக் கொண்ட அந்த காவல் அதிகாரி, நாங்கள் இதுவரை வேறு கோணத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தோம். உங்களுடைய தகவல் அடிப்படையில் விசாரிக்கிறோம். உங்கள் பெயர் வெளியே வராது என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் தொடர்பு கொண்டு, 'இப்படி நீங்கள் பேசியதை வெளியே யாரிடமும் கூறிவிடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார்.
 
இதன் தொடர்ச்சியாக சுவாதியின் அப்பா அப்பெண்ணை பார்த்து, 'நீ சுவாதியின் விஷயத்தில் ரொம்பவும் இன்வாலாகிறாய். உனக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்' என்று கூறிய 'தொனி' சற்று நக்கலாக இருந்ததாக அப்பெண் சுட்டிக்காட்டுகிறார்.
 
மற்றொரு பக்கம் என்ன காரணத்திற்காக சுவாதி படுகொலை செய்யப்பட்டாரோ அந்த நோக்கம் ஓய்.ஜி.மகேந்திரன் போன்ற பா.ஜ.க அரசியல் ஆதரவாளர்கள் கிளப்பிய 'இஸ்லாமிய வெறுப்பு அரசியல்' இணையதளங்களில் கடுமையான சச்சரவுகளை எதிர்கொள்ள, படுகொலை வேறு கோணத்தில் முடிக்க வேண்டிய நெருக்கடியை இணைதள விவாதங்கள் உருவாக்கி விட்டன.
 
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை கடைசியில் ஒருதலைக் காதலாக மாற்றப்பட்டு தென்காசியில் இருந்த ராம்குமாரை பிடித்து அவர் கழுத்தை அறுக்கும் வரை சென்றது. மறுபுறம் அப்பெண்ணையும் கொல்ல வேண்டும் என்று வெறிக் கொண்டு எழுந்தது.
 
அந்த அதிகாரி மறைவாக ஓர் இடத்தில் நிற்க, அங்கே இருவர் வரும் போது அவர்களிடம் கத்தி இருந்ததை தான் பார்த்ததாக அப்பெண் கூறியதை சென்னை கமிஷனரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ, 'அப்படியாம்மா... சரியா பார்த்தியம்மா...' என்பதோடு நிறுத்தி விட்டார்.
 
ஒருவேளை உண்மையில் சென்னை கமிஷனருக்கு எதுவும் தெரியாது என்றால் அந்த அதிகாரியை அவ்வாறு செய்யத் தூண்டியது யார்?
 
சுவாதியின் அப்பாவா? சுவாதியின் சித்தாப்பாவா? என்பதையாவது விசாரிக்க தமிழக காவல்துறை முன்வருமா?
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :