திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:12 IST)

சிறப்பு தீர்மானம் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம்: தமிமுன் அன்சாரி பேட்டி..!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்த நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதிமுகவின் எல்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையின் பெரும்பான்மையாக உள்ள நிலையில்  சிறப்பு தீர்மானம் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம்.
 
பேரறிவாளன் விடுதலை போல, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தீர்மானம் இயற்ற வலியுறுத்தினோம். மெலும் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள அனைத்து கட்சிகளையும் சந்தித்து வருகிறோம் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
 
Edited by Siva