1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:48 IST)

அரசு விழா ?பிஜேபி விழாவா? தந்தை பெரியார் திராவிடர் கழகம் கேள்வி !

bjp
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில் மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பிஜேபி தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர்  கு.இராமகிருட்டிணன்  கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்று, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழாவில் மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பிஜேபி தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளார். இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? 
 
அரசு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம் தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விழாவில் மேடையில் பிஜேபி தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
கு.இராமகிருட்டிணன்
(பொதுச் செயலாளர்) 
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.